தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மரில் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கை

ஜிப்மரில் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கை

ஜிப்மரில் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கை


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
ஜிப்மரில் புதுச்சேரி மாநில இடஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேர்ந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டி கவர்னரிடம், அன்பழகன் எம்.எல்.ஏ, மனு அளித்தார்.
மனு விபரம்: மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்வியில், புதுச்சேரி மாநில இடஒதுக்கீட்டை, ஆண்டு தோறும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் பறித்து வருகின்றனர். இந்தாண்டு ஜிப்மரில் மொத்தமுள்ள 250 இடங்களில், புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட 64 இடங்களில், 31 இடங்களை தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசின் ஊழியர்கள் பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.
இது புதுச்சேரிக்கு இழைக்கப்படும் அநீதி. இதற்கு புதுச்சேரி மாநில அரசு சரியான சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தாததே காரணம்.புதுச்சேரி மாநில இடத்தில் சேர்க்கை பெற்ற 31 மாணவர்களின் பெயர், புதுச்சேரி மாநில நீட் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறவில்லை. பிறகு எப்படி, புதுச்சேரி மாநில இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும்.இதேபோன்று, புதுச்சேரி அட்டவணை இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 12 இடங்களில், 8 இடங்களை புதுச்சேரிக்கு சம்பந்தமே இல்லாத வெளிமாநிலத்தவர்களை கொண்டு நிரப்பட்டுள்ளது.
இவர்கள், புதுச்சேரி குடியுரிமை பெற்றவர்களா, திருத்தப்பட்ட அரசாணைப்படி மூன்றாண்டுகள் புதுச்சேரியில் படித்தார்களா என்பதை கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்த பிறகே, அவர்களுக்கு ஜிப்மரில் சேர்க்கை வழங்க வேண்டும். வருவாய்த்துறையினர், ஜிப்மருடன் இணைந்து சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.
புதுச்சேரி மாநில நீட் தேர்வு பட்டியலில் இல்லாதவர்களுக்கு, புதுச்சேரி ஒதுக்கீட்டில் சீட் வழங்கியது எப்படி, மத்திய அரசு ஊழியர் பெயரில், மாநில ஒதுக்கீட்டு இடங்களை திட்டமிட்டு அபகரிப்பது குற்றச்செயல். சிறு சிறு ஓட்டைகளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதன் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதபடி, கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us