தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., சீட் மறுப்பு்: மாற்று ஏற்பாடு செய்ய ஐகோர்ட் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., சீட் மறுப்பு்: மாற்று ஏற்பாடு செய்ய ஐகோர்ட் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., சீட் மறுப்பு்: மாற்று ஏற்பாடு செய்ய ஐகோர்ட் உத்தரவு


UPDATED : நவ 10, 2009 12:00 AM

ADDED : நவ 10, 2009 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2009 12:00 AM ADDED : நவ 10, 2009 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னியாகுமரியை சேர்ந்த முகமது சேக் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனு:


எனக்கு மருத்துவ கல்வி தேர்வு குழு குலசேகரம் மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் சீட் ஒதுக்கி 2009 செப்., 30ல் உத்தரவிட்டது. அதே தேதியில் கல்லூரியில் போய் சேரும்படி கூறினர். இந்த தகவலை நான் கல்லூரிக்கு தெரிவித்தேன். சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல இரவு ஆகி விட்டது. மறுநாள் மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது அட்மிஷன் முடிந்து விட்டதாக தெரிவித்தனர். என்னை கல்லூரியில் சேர்த்து கொள்ள உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.


மனு நீதிபதி கே.என்.பாஷா முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல், நாங்கள் அவருக்கு சீட் ஒதுக்கி விட்டோம். கல்லூரி நிர்வாகம் வேகமாக அட்மிஷனை முடித்து விட்டது என்றார். கல்லூரி நிர்வாகம், மனுதாரர் செப்., 30 மாலை வரை வரவில்லை என்றது.


முடிவில் நீதிபதி,எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர இருந்தவரை நட்டாற்றில் விட்டுள்ளனர். மனுதாரரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரிக்கு போய் சேர இயலவில்லை. ஆகையால் அவருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த தகவலை கோர்ட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us