தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை தேடிச் சென்று பாடம்; அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு

மாணவர்களை தேடிச் சென்று பாடம்; அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு

மாணவர்களை தேடிச் சென்று பாடம்; அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு


UPDATED : ஏப் 30, 2021 12:00 AM

ADDED : ஏப் 30, 2021 06:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2021 12:00 AM ADDED : ஏப் 30, 2021 06:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்:
பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்களைத் தேடி சென்று பாடம் நடத்தி வருகிறார் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 70 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்., 22ம் தேதி முதல், பிரிட்ஜ் கோர்ஸ் (இணைப்பு பயிற்சி பாடம்) புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மாணவர்கள் விடுமுறையில் உள்ளதால், அவர்களை தேடிச் சென்று, பயிற்சி புத்தகங்களை வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன், அவர்களுக்கு பாடம் நடத்தி, பயிற்சியும் அளித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:


மூன்று தெருக்களை சேர்ந்த மாணவ, மாணவியரை அழைத்து, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் அமர செய்து கொரோனா தடுப்பு முறைகளை முறையாகப் பின்பற்றி, பயிற்சி அளித்து வருகிறேன். பயிற்சி புத்தகத்தில் உள்ள வினா, விடைகளை விளக்கி, அவற்றை எழுதும் பயிற்சியும் அளிக்கிறேன்.
அவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். அதற்கான மதிப்பெண்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.கல்வி தொலைக்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கான அட்டவணையும், அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us