தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி: கல்வித்துறை புதிய திட்டம்

அரசு பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி: கல்வித்துறை புதிய திட்டம்

அரசு பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி: கல்வித்துறை புதிய திட்டம்


UPDATED : நவ 22, 2009 12:00 AM

ADDED : நவ 22, 2009 06:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2009 12:00 AM ADDED : நவ 22, 2009 06:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடப்பு கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒன்பது லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வில் தோல்வி அடையும் பலர் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம், அறிவியல், கணிதத்தில் அதிகம் தோல்வி அடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களும் நூறு சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலம், அறிவியல், கணித  ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். 20 ஆண்டுகளாக ஆங்கிலம், அறிவியல், கணிதம் நடத்தும் சிறந்த ஆசிரியர்கள் மற்றம் பல ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர்.

எளிய முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது, அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள், விடை அளிக்கும் முறை, கணிதத்தில் எளிய முறையில் வரைபடம் வரைவது குறித்து ஆசிரியர்கள் பயிற்சி பெறுவர். பயிற்சியின் அனுபவத்தை பயன்படுத்தி ஆசிரியர்கள் நூறு சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us