தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்ட மேற்படிப்பு உதவி தொகை : மருத்துவ கல்லூரிகளுக்கு கெடு

பட்ட மேற்படிப்பு உதவி தொகை : மருத்துவ கல்லூரிகளுக்கு கெடு

பட்ட மேற்படிப்பு உதவி தொகை : மருத்துவ கல்லூரிகளுக்கு கெடு


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவ பட்ட மேற்படிப்பின்போது, மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவி தொகையை வழங்க, கல்லுாரிகள் மறுக்க முடியாது; ஆறு வாரங்களுக்குள் அதை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், கடந்த 2017-18 மற்றும் 2019-20ம் கல்வி ஆண்டுகளில், மருத்துவமனைகளில் ஆற்றிய பணிகளுக்கான உதவி தொகையை, கல்லுாரி நிர்வாகங்கள் வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி மருத்துவ கவுன்சில் விதிகள்படி நான்கு வாரத்துக்குள் உதவி தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லுாரிகள் வழங்க வேண்டும் என 2021ல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, இரண்டு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் சார்பில், மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மருத்துவ கல்லுாரிகள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் விஜய்நாராயண், பி.எஸ்.ராமன் ஆஜராகினர். மாணவர்கள் தரப்பில், வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கல்வி கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எதிர்த்த வழக்கு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது, இந்த நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்திய மாணவர்கள், கூடுதல் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு உதவித் தொகை வழங்க முடியாது என, மருத்துவ கல்லூரிகள் மறுக்க முடியாது. மருத்துவ கவுன்சில், முதுநிலை மருத்துவ கல்வி விதிகள்படி, ஆறு வாரங்களுக்குள், மாணவர்களுக்கான உதவித் தொகையை, மருத்துவ கல்லுாரிகள் வழங்க வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us