தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருத்தணி அருகே சிறுத்தை நடமாட்டமா? பள்ளி மாணவர்கள் கூறியதால் விசாரணை

திருத்தணி அருகே சிறுத்தை நடமாட்டமா? பள்ளி மாணவர்கள் கூறியதால் விசாரணை

திருத்தணி அருகே சிறுத்தை நடமாட்டமா? பள்ளி மாணவர்கள் கூறியதால் விசாரணை


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளி மாணவர்கள் பத்து பேர், நேற்று மதியம் உணவு இடைவெளி நேரத்தில் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள வயல்வெளியில் சிறுத்தை ஒன்று சென்றதாக கூறி, அலறி அடித்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆசிரியர்கள் திருத்தணி வருவாய் துறையினருக்கு தெரிவித்தனர்.திருத்தணி தாசில்தார் மதன், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து வனத்துறை அதிகாரி அருள் தலைமையில் மூன்று ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறையினர் என பத்துக்கும் மேற்பட்டோர் முருக்கம்பட்டு பகுதி முழுதும் சென்று சோதனை செய்தனர். ஆனால் சிறுத்தை கால் தடம் மற்றும் வந்து போனதற்கு எவ்வித அடையாளம் தெரியவில்லை. ஒன்றரை மணி நேரம் ஆய்வு செய்தும் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.இது குறித்து திருத்தணி வனத்துறை அதிகாரி அருள் கூறியதாவது:
சிறுத்தை புலி நடமாட்டத்திற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. முருக்கம்ப்பட்டில் இருந்து மத்துார் வனப்பகுதிக்கு,15 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள காப்பு காடுகளில் சிறுத்தை இல்லை. மாணவர்கள் நாயை பார்த்து சிறுத்தை என கூறியிருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us