தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு வயது தளர்வு: அரசு ஊழியர் கோரிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு வயது தளர்வு: அரசு ஊழியர் கோரிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு வயது தளர்வு: அரசு ஊழியர் கோரிக்கை


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசு 7 ஆண்டுகளுக்கு பிறகு கல்வித்துறையில் 145 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் வயது கடந்து விட்டதால், வயது வரம்பில் 2 ஆண்டு தளர்வு அளிக்க வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது.குரூப் பி பதவி என்பதால் யு.பி.எஸ்.சி., யிடம் வயது தளர்வுக்கு அனுமதி பெற வேண்டும் என உயரதிகாரிகள் அரசை தவறாக வழி நடத்துகின்றனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடம் குரூப் பி பதவி என்றாலும், வயது தளர்வுக்கு யு.பி.எஸ்.சி. அனுமதி தேவையில்லை.ஒவ்வொரு பதவிக்கும் பணி நியமன விதி, அரசியல் சாசன விதி எண் 309 படி உருவாக்கப்படுகிறது. அதற்கான அதிகாரம் புதுச்சேரியை பொறுத்தவரை கவர்னருக்கு மட்டுமே உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கான பணி நியமன விதியின்படி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய விண்ணப்பம் பெற வேண்டும்.அந்த பணி நியமன விதி வரிசை எண் 14ன்படி இந்த பதவிக்கு தேர்வு செய்யும் போது யு.பி.எஸ்.சி.யிடம் ஆலோசிக்கத் தேவையில்லை. புதுச்சேரி கவர்னர், கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு குருப் சி பதவிகளுக்கு வயது உச்சவரம்பில் இரண்டு ஆண்டு தளர்வு அளித்தது போல், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவிக்கும் வயது தளர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us