தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்; ஐகோர்ட்டில் தாக்கலான மனு வாபஸ்

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்; ஐகோர்ட்டில் தாக்கலான மனு வாபஸ்

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்; ஐகோர்ட்டில் தாக்கலான மனு வாபஸ்


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நீட் தேர்வை எதிர்த்து, தி.மு.க.,வினர் நடத்தும் கையெழுத்து இயக்கத்தை, பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.ஒரு பிரச்னை குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த மனு:
நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும், நீட் தேர்வு விஷயத்தில் இறுதி முடிவு வந்து விட்டது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அறிவித்து உள்ளார். இது, சட்டத்துக்கு எதிரானது.ஆளும் கட்சி என்பதை சாதகமாக்கி, பள்ளி வளாகத்துக்குள் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதை, அனுமதிக்க முடியாது. எனவே, பள்ளி வளாகத்தில் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என, பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கையெழுத்து இயக்கத்தால், மனுதாரர் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார் என முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. ஒரு பிரச்னையை எதிர்த்து, ஒருவர் கையெழுத்து இயக்கம் நடத்தலாம்; குறிப்பிட்ட பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உள்ளது.ஒரு முடிவு எடுக்கப்பட்டு, அது பொது கொள்கைக்கு எதிராக இருப்பதாக கருதினால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். இதுபோன்ற பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய, ஒரு வரம்பு இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மனுதாரர் தன் உண்மை தன்மையை நிரூபிக்க, 1 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்யும் பட்சத்தில், வழக்கை விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணையை முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us