தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழி வாங்க திட்டமிட்ட தலைமையாசிரியர்! துறை ரீதியாக நடவடிக்கை பாயும்

பழி வாங்க திட்டமிட்ட தலைமையாசிரியர்! துறை ரீதியாக நடவடிக்கை பாயும்

பழி வாங்க திட்டமிட்ட தலைமையாசிரியர்! துறை ரீதியாக நடவடிக்கை பாயும்


UPDATED : நவ 04, 2023 12:00 AM

ADDED : நவ 04, 2023 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2023 12:00 AM ADDED : நவ 04, 2023 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில், மாணவர்களை தவறாக பயன்படுத்தி விடியோ வெளியிட்ட தலைமை ஆசிரியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 59 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை, ஆசிரியர் அடிப்பதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் சமூக வலைதளத்தில், வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் பேரின்பமன்னன் கூறியதாவது:
நேற்று முன்தினம் விடுப்பு எடுத்திருந்தேன். எனக்கு மாற்றாக உமா என்ற ஆசிரியை மாணவர்களை பராமரிக்க அறிவுறுத்தினேன். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த பின், ஆசிரியர் உமா அடிப்பதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாணவர்கள் கூறினர். மேலும், ஆசிரியருக்கு பயந்து, 1098 என்ற எண்ணிற்கு போன் செய்து புகார் தெரிவித்ததாக கூறினர். அதை வீடியோ எடுத்து, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பினேன்.இவ்வாறு, கூறினார்.ஆசிரியை உமாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பேசி, தவறாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி பாதிப்படைகிறது.தலைமை ஆசிரியர், கடந்த இரண்டு மாதத்திற்கு முன், மாணவர்களின் கழிப்பிடத்தை பூட்டி வைத்தார். புதர் மண்டி இருந்தது குறித்தும், சுத்தம் செய்ய கேட்டும் அவர் அந்த பணியை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.அதன்பின், வட்டார கல்வி அலுவலரிடம் கேட்டு சரி செய்தோம். இது போல் நிறைய பிரச்னை இங்கு உள்ளது. இதையெல்லாம், தலைமை ஆசிரியரிடம் கேட்டால் முறையாக பதிலளிப்பதில்லை. இதை மனதில் வைத்து, பழிவாங்கும் நோக்கில் மாணவர்களை பயன்படுத்தி வீடியோ எடுத்துள்ளார்.இவ்வாறு, கூறினார்.வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் கூறியதாவது:
வீடியோ குறித்து விசாரணை செய்ததில், பள்ளி தலைமை ஆசிரியர் பேரின்பமன்னன் மாணவர்களை வீடியோ எடுத்தது தெரியவந்தது. பள்ளி ஆசிரியர் குறித்து தவறாக பேசும் படி, மாணவர்களை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us