தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜார்க்கண்டில் தமிழக மாணவர் மரணம்; விசாரணை கேட்டு முதல்வர் கடிதம்

ஜார்க்கண்டில் தமிழக மாணவர் மரணம்; விசாரணை கேட்டு முதல்வர் கடிதம்

ஜார்க்கண்டில் தமிழக மாணவர் மரணம்; விசாரணை கேட்டு முதல்வர் கடிதம்


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்துாரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மதன்குமார், 28. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லுாரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்தார்.அவர் காணாமல் போய், பிறகு அவரது உடல் எரிந்த நிலையில், அவர் தங்கியிருந்த விடுதி பின்புறம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இச்செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மதன் குமாரின் உடல் விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதன்குமார் இறந்த சம்பவம் குறித்து, ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மதன்குமார் இறப்பு குறித்து, உரிய விசாரணையை விரைவாக மேற்கொண்டு, அவரது இறப்புக்கு நீதி கிடைக்கும் வகையில், துரித நடவடிக்கை மேற்கொள்ள, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us