தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக மாணவர்களிடம் மோசடி: மூவர் கைது
தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக மாணவர்களிடம் மோசடி: மூவர் கைது
UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 08:56 AM
மறைமலை நகர்:
மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில், பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம கும்பல், தேர்வில் தேர்ச்சி பெற செய்வதாக கூறி பணம் பறித்து வந்த தகவல், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியவந்தது.இது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகிகள், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி, 31, அவரின் தம்பி எழிலரசு, 30. கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ், 27, ஆகிய மூவரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து 13.30 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், மூவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.