செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மசோதா: ஐரோப்பியன் பார்லி.,யில் நிறைவேற்றம்
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மசோதா: ஐரோப்பியன் பார்லி.,யில் நிறைவேற்றம்
UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 10:00 AM
ஸ்டார்ஸ்பெர்க்:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா ஐரோப்பியன் யூனியன் பார்லிமென்ட்டில் நிறைவேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.மனித மூளை போன்றே செயல்படும், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு என்ற, தொழில்நுட்பம் இன்று உலகின் சிந்தனை போக்கை மாற்றி அமைத்து வருகிறது. நாளைய உலகை ஆளப்போவது இந்த தொழில்நுட்பம் படிப்பு தான்.இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தினை ஒழுங்குபடுத்துவற்கான சட்ட மசோதா ஐரோப்பியன் யூனியன் பாராளுமன்றத்தில் அதன் தலைவர் ரூபர்ட்டா மெட்ஸோலா தாக்கல் செய்து உரையாற்றினார்.பின் அதன் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு அளிக்கப்பட்டதை தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த மசோதா குறித்த விதிமுறைகளை உறுதிப்படுத்த, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய யூனியன் கமிஷன் ஆகியவை, விவாதத்தை நடத்திய பின் இச்சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அறிவிக்கும் என வெளிநாட்டு இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.சட்டத்தை மீறினால்
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்கள், அதிகபட்சம் 3 கோடி யூரோ, அல்லது ஆண்டு வருமானத்தின் 6 விழுக்காட்டுப் பகுதியை அபராதமாகச் செலுத்த வேண்டும். கூகுல், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு, அபராதத் தொகை, 100 கோடி யூரோ இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

