பிரதமர் ரோட் ஷோ சீருடையில் பள்ளி மாணவிகள்: அதிகாரிகள் விசாரணை
பிரதமர் ரோட் ஷோ சீருடையில் பள்ளி மாணவிகள்: அதிகாரிகள் விசாரணை
UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:05 AM
கோவை:
கோவையில் பிரதமர் மோடி ரோட்ஷோ வின் போது பள்ளி மாணவிகள் சீருடையில் நின்றது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்திற்கு ஏப். 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி கோவை வந்தார்.கோவை சாய்பாபா கோவில் துவங்கி ஆர்.எஸ்.புரம் வரை ரோட் ஷோ நடந்தது. வழி நெடுகிலும் பா.ஜ.,வினர் பொதுமக்கள் திரண்டு மலர்தூவி வரவேற்றனர். பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவின் போது பள்ளி மாணவிகள் சீருடையில் நின்றிருந்த புகைப்படம் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.தேர்தல் பிரச்சாரங்களுக்கு மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்துள்ளது. எனவே மோடி நடத்திய ரோட் ஷோ தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விமர்சனம் எழுந்துள்ளது.இது தொடர்பாக நடந்த விசாரணையில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவிகள் தான் பங்கேற்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.உரிய விசாரணை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியான கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.