இயற்கை விவசாயம் இலவச பயிற்சி; வேளாண் அறிவியல் மையம் அழைப்பு
இயற்கை விவசாயம் இலவச பயிற்சி; வேளாண் அறிவியல் மையம் அழைப்பு
UPDATED : மே 22, 2024 12:00 AM
ADDED : மே 22, 2024 10:40 AM
கோவை:
இந்திய வேளாண் திறன் மேம்பாட்டுக் கழக திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் அறிவியல் மையம் அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம். 20 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். உரம், ஒருங்கிணைந்த பண்ணையம் உட்பட இயற்கை விவசாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் நேரடி களப்பயிற்சி வழங்கப்படும்.
முதல்கட்டமாக, 20 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவசாயிகள் இருப்பின் அதிகபட்சம் 5 விவசாயிகள் அனுமதி பெற்று இணைக்கப்படுவர். முற்றிலும் இலவச பயிற்சி. வயது உச்சவரம்பு இல்லை.
வரும் 28ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 63820 -67704, 90477 -56077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.