தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச விண்வெளி தீர்வு போட்டி: ஸ்ரீசைதன்யா பள்ளி உலக சாம்பியன்

சர்வதேச விண்வெளி தீர்வு போட்டி: ஸ்ரீசைதன்யா பள்ளி உலக சாம்பியன்

சர்வதேச விண்வெளி தீர்வு போட்டி: ஸ்ரீசைதன்யா பள்ளி உலக சாம்பியன்


UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM

ADDED : ஜூன் 18, 2024 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM ADDED : ஜூன் 18, 2024 08:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை :
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய, 'சர்வதேச விண்வெளி தீர்வு போட்டிகள் - 2024'ல், ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள், தொடர்ந்து 11வது முறையாக, உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து, ஸ்ரீ சைதன்யா பள்ளி கல்வி இயக்குனர் சீமா கூறியதாவது:

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், NASA's NSS ISDC conference எனப்படும், சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டை நடத்தியது.

இதில், 30 நாடுகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஸ்ரீ சைதன்யா பள்ளியில் இருந்து மட்டும், 167 மாணவர்கள் நேரடியாக பங்கேற்றனர். வேறு எந்த பள்ளியும் இவ்வளவு மாணவர்களை அனுப்பவில்லை.

இதுதவிர, நாசாவின் விண்வெளி தீர்வு போட்டிகள் - 2024, ஆன்லைன் வழியில் நடந்தன. இந்தியாவில் இருந்து, 28,000 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 639 பேர் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள். இவர்கள், 62 திட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்ததுடன், 11வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

வெற்றி பெற்ற 62 திட்டங்களில், 7ல் முதலிடம், 11ல் இரண்டாம் இடம், 15ல் மூன்றாம் இடம், 29ல் கவுரவ பரிசை பெற்றனர். ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களில், 90 பேர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, தமிழக மாநிலங்களில் இருந்து, ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களை தவிர, வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து 13வது முறையாக, இந்த மாநாட்டில் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று, புதிய சாதனை படைத்துள்ளனர். மேலும், கலை தகுதி, இலக்கிய தகுதி போட்டியில், ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து, 500 டாலர் பரிசுத் தொகையை பெற்றனர்.

மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள், நாசா விஞ்ஞானிகளை சந்தித்து பேசினர். கலிபோர்னியா அறிவியல் மையம் உட்பட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us