sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக என்.பி.எஸ்., வாத்சல்யா ஓய்வூதிய திட்டம்

/

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக என்.பி.எஸ்., வாத்சல்யா ஓய்வூதிய திட்டம்

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக என்.பி.எஸ்., வாத்சல்யா ஓய்வூதிய திட்டம்

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக என்.பி.எஸ்., வாத்சல்யா ஓய்வூதிய திட்டம்


UPDATED : செப் 21, 2024 12:00 AM

ADDED : செப் 21, 2024 07:02 AM

Google News

UPDATED : செப் 21, 2024 12:00 AM ADDED : செப் 21, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சிறுவயதிலேயே சேரும் வகையில், என்.பி.எஸ்., வாத்சல்யா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஓய்வூதிய நிதி நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஆணையமான பி.எப்.ஆர்.டி.ஏ., கண்காணிப்பில் செயல்படக்கூடிய என்.பி.எஸ்., வாத்சல்யா திட்டத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்துள்ளார்.

பெற்றோர் அல்லது பாதுகாவலர், 18 வயதுக்கு குறைவான சிறுவர் - சிறுமியர் பெயரில் இந்த கணக்கை துவங்கி, பணத்தை டிபாசிட் செய்து வரலாம். சிறாரின் பெயரில் தான் கணக்கு துவங்கப்பட வேண்டும். வாத்சல்யா கணக்கு துவங்குவோருக்கு, ப்ரான் எனப்படும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படும்.

இந்தக் கணக்கில், ஆண்டுக்கு குறைந்தபட்சம், 1,000 ரூபாய் டிபாசிட் செய்வது அவசியம். அதிகபட்ச டிபாசிட் தொகைக்கு உச்சவரம்பு இல்லை. மைனராக இருக்கும் சிறுவனோ - சிறுமியோ 18 வயதை அடையும்போது, வாத்சல்யா கணக்கை, வழக்கமான என்.பி.எஸ்., கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.

குழந்தைகள் 18 வயதை எட்டும்போது, ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பையும், நிதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகன்யா சம்ருதி



பெண் குழந்தைகளின் நிதிப் பாதுகாப்புக்காக, சுகன்யா சம்ருதி என்ற சேமிப்பு திட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டது. பின், அது ஆண் குழந்தைகளுக்கும் அனுமதிக்கப்பட்டது. தற்போது, என்.பி.எஸ்., வாத்சல்யா திட்டத்தால், நீண்ட கால முதலீட்டின் வாயிலாக, கணிசமான ஓய்வூதியத்தை, சிறுவயது முதலே உறுதி செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு என்.பி.எஸ். வாத்சல்யா?

*18 வயதுக்கு குறைந்த, பான் கார்டு உள்ளவர்களுக்கு

*வெளிநாடுவாழ் இந்தியர்களின் குழந்தைகளும் சேரலாம்

*ஆண்டு குறைந்தபட்ச டிபாசிட் ரூ.1,000

*அதிகபட்ச தொகைக்கு உச்சவரம்பு இல்லை

*பெற்றோர் (அ) பாதுகாவலர், மைனரின் சார்பில் பணம் செலுத்தலாம்

*18 வயதை எட்டும்போது, வழக்கமான என்.பி.எஸ்., ஓய்வூதிய கணக்காக மாற்றலாம்

*பங்குச் சந்தை, அரசு பத்திரங்களில் முதலீடு வாய்ப்புகள் உண்டு.

வெளியேற முடியுமா?

சேமிக்கப்படும் தொகையை, கணக்கு துவங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகள் திரும்பப் பெற இயலாது. மூன்று ஆண்டுகளுக்குப் பின், சில காரணங்களுக்காக மட்டும் 25% வரை திரும்பப் பெறலாம்.

18 வயதை எட்டி, வழக்கமான என்.பி.எஸ்., கணக்காக மாற்றப்பட்டதும், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்பு இருந்தால், 20% வரை திரும்பப் பெறலாம். மீதமுள்ள 80% தொகை, ஓய்வூதிய தொகுப்பு நிதியாக பயன்படுத்தப்படும்.

ரூ.2.50 லட்சத்துக்கு குறைவான சேமிப்பு இருந்தால், மொத்த தொகையையும் திரும்பப் பெற அனுமதி. இறப்பு நேரிட்டால், கணக்கில் சேர்ந்துள்ள தொகை முழுதும் பெற்றோர் (அ) பாது காவலருக்கு வழங்கப்படும்.

என்னென்ன தேவை?


*கணக்கு துவங்கப்படும் சிறுவர் - சிறுமியரின் பான் கார்டு

*பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணம்/ பிறப்பு சான்றிதழ்

*பெற்றோர் (அ) பாதுகாவலரின் கே.ஒய்.சி. ஆவணங்கள்.

எங்கு துவங்குவது?

இ - என்.பி.எஸ்., இணைய தளம்.

முதலீட்டை தேர்வு செய்யலாமா?

டிபாசிட் செய்யப்படும் தொகையை, எதில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என்பதை பெற்றோர்/பாதுகாவலர் தேர்வு செய்ய அனுமதிப்படிவர். தேர்வு செய்யாதவர்களுக்கு, மாடரேட் லைப் சைக்கிள் பண்ட் என்ற பெயரில், 50% தொகை பங்குச் சந்தை முதலீடாக தேர்வு செய்யப்படும்.

தானாக தேர்வு செய்யும் முறையில், பங்குச் சந்தை முதலீடு 75%, லைப் சைக்கிள் பண்ட் 25% (அ) பங்குச் சந்தை முதலீடு 25%, லைப் சைக்கிள் பண்ட் 75% என முதலீடு செய்யப்படும்.

குழந்தைகளுக்கு சிறந்த பரிசு தரலாம்!

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, என்.பி.எஸ். வாத்சல்யா என்ற குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை, சென்னை, திருச்சி துறையூர், நெல்லை களக்காடு உட்பட நாடு முழுதும், 75 இடங்களில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.

அரசு ஊழியர்களுக்காக மட்டும் இருந்த ஓய்வூதிய திட்டத்தை, நாட்டு மக்கள் அனைவருக்கும், பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

இப்போது குழந்தைகளுக்கும், அதாவது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, என்.பி.எஸ். வாத்சல்யா ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான இத்திட்டம், மோடி அரசின் ஓர் புதிய முயற்சி.

இதன்படி, 1,000 ரூபாய் முதல் சிறிய தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் வாயிலாக, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, பெரிய தொகையை சேமிக்க முடியும். ஓய்வு காலத்துக்குப் பின் ஓய்வூதியம் பெற முடியும்.

இத்திட்டம் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெற்றோரிடம் ஏற்படுத்தும்; சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும். சிறு வயதிலேயே நிதி பொறுப்புணர்வையும் உருவாக்கும்.

தங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைத்து, அதை பிறந்த நாள் பரிசாக, பெற்றோர் வழங்க வேண்டும். இது, குழந்தைகளுக்கு செய்யப்படும் வாழ்நாள் பங்களிப்பாக இருக்கும். குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை இத்திட்டம் வழங்கும்.

சென்னையில் நடந்த நிகழ்வில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் மோகன், செயல் இயக்குனர் தன்ராஜ், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் இளங்கோ, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Dinamalar
      Follow us