ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
UPDATED : அக் 03, 2024 12:00 AM
ADDED : அக் 03, 2024 08:13 AM
புதுச்சேரி:
புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியில் இயங்கி அடல் இன்குபேஷன் சென்டர், டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கான ஆவணங்களை அடல் இன்குபேஷன் சென்டர் செயலாக்க இயக்குனர் சுந்தரமூர்த்தி, டேலி சொல்யூஷன்ஸ் தலைமை சந்தையாக்கல் பிரிவு அதிகாரி ஜெயதி சிங் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, புதுச்சேரியில் வளர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வழிகாட்டல், நிதியுதவி, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
அடல் இன்குபேஷன் சென்டர் செயலாக்க இயக்குனர் சுந்தரமூர்த்தி கூறும்போது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வேளண்மை, சுகாதார பராமரிப்பு, துாய்மையான ஆற்றல், கல்வி உள்பட துறைகளில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். இளம் தொழில் முனைவோர்களுக்கு குறிப்பாக பிசினஸ் முயற்சியில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு வழிகாட்தல்களையும் அடல் இன்குபேஷன் சென்டர் வழங்கும். தொழில் நிறுவனங்கள் தங்களை விரிவுப்படுத்தி கொள்ளவும், தொழிலில் அடுத்த கட்டத்திற்கான தொழில்நுடப்பம் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம் அளிக்கும் என்றார்.
தலைமை செயலர் அலுவலர் விஷ்ணு வரதன் கூறும்போது, புதுச்சேரியில் ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு திறன் அதிகாரம் கிடைக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஸ்டார்ப் அப் நிறுவனங்களுக்கு புத்துயிர் கிடைக்கும் என்றார்.