குட்டி ஹெல்மெட் கட்டாயமா: கேரள போக்குவரத்து அமைச்சர் சொல்வதை கேளுங்க!
குட்டி ஹெல்மெட் கட்டாயமா: கேரள போக்குவரத்து அமைச்சர் சொல்வதை கேளுங்க!
UPDATED : அக் 10, 2024 12:00 AM
ADDED : அக் 10, 2024 12:53 PM
திருவனந்தபுரம்:
கார், டூவிலரில் செல்லும் குழந்தைகள், கட்டாயமாக சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு போடவில்லை என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறினார்.
நான்கு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கார் மற்றும் டூவீலர்களில் சீட் பெல்ட், ஹெல்மெட் ஆகிய விதிகளை அமல்படுத்த மோட்டார் வாகனத் துறை முடிவு செய்திருப்பதாக கேரளா போக்குவரத்து கமிஷனர் நாகராஜு சகிலம் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த கருத்தை மறுத்து போக்குவரத்து துறை அமைச்சர் கூறுகையில், மாநில அரசு 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என டுவீலரில் சீட் பெல்ட், கட்டாய குட்டி ஹெல்மட் அணிய எந்த உத்தரவும் போடவில்லை. மோட்டார் வாகன சட்டப்படி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து கமிஷனர் அவ்வாறு கூறியிருப்பார், என்றார்.