ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்
ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்
UPDATED : டிச 12, 2024 12:00 AM
ADDED : டிச 12, 2024 09:58 AM
தஞ்சாவூர் :
தஞ்சாவூர் மாவட்டம், ஆரலுார், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் அலெக்சாண்டர். இவர் தத்துவாஞ்சேரியில், 6ம் தேதி, அம்பேத்கர் நினைவு நாளில், தமிழ் தேசிய முன்னேற்றக் கழக சார்பில் நடந்த கட்சி கொடியேற்று விழாவில் பங்கேற்றார்.
விழாவில், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் குறித்து இழிவாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கலெக்டர் மற்றும் திருப்பனந்தாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, இரு ஜாதிகளுக்குகிடையே மோதல்களை துாண்டும் விதமாகவும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், ஆசிரியர் அலெக்ஸாண்டரின் செயல்பாடு இருப்பதாக கூறி, அவரை மறு உத்தரவு வரும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும், மாவட்டத்தில் இருந்து வேறு எங்கும் முன் அனுமதி இன்றி, அவர் செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.