sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்கலைகளில் இனி உதவி மையம்; அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!

/

பல்கலைகளில் இனி உதவி மையம்; அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!

பல்கலைகளில் இனி உதவி மையம்; அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!

பல்கலைகளில் இனி உதவி மையம்; அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!


UPDATED : டிச 27, 2024 12:00 AM

ADDED : டிச 27, 2024 05:55 PM

Google News

UPDATED : டிச 27, 2024 12:00 AM ADDED : டிச 27, 2024 05:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
இம்மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:


கல்லூரி பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. எந்த வித குறுக்கீடும், முறைகேடும் இல்லாமல் 350க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்தாய்வு மூலம் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில் அண்ணா பல்கலை.யில் நடந்த நிகழ்வு யாரும் எதிர்பாராதது. நடந்த நேரம், சூழல் என்ன, பல்கலைக்கழக மாணவி, ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தகாத நபர், விரும்பாத காரியத்தை செய்ததன் விளைவு. 23ம் தேதி நடந்த சம்பவம், 25ம் தேதி புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புகார் மனு பெற்ற குறுகிய நேரத்தில் அந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லூரியிலும், பல்கலைக்கழத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கமிட்டிக்கு புகார் அளித்தாலும் விசாரிப்பார்கள் அல்லது இந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மாணவிகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் ஐயம் கொண்டால் நீங்களாகவே கூப்பிட்டு கவுன்சிலிங் செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அந்த வகையில் அண்ணா பல்கலை.யில் கமிட்டியின் கருத்து எங்களுக்கு வர வில்லை என்பது சங்கடமான செய்தி. காவல் நிலையத்திற்கு புகார் போன பிறகு தெரிகிறது. பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையிலும் நானும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கிறேன்.

சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே மகளிர் தேசிய ஆணையம் வழக்கில் இணைந்து விசாரிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தரும்.

இந்த நிலையில், இதை அரசியலாக்குகிறார்கள் என்பது தான் பரப்பப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், எந்த வகையிலும் இவ்விவகாரத்தை தமிழக அரசோ, நாங்களோ அரசியலாக்கி ஆதாயம் அடையும் சூழலில் இல்லை.

ஒன்றும் கிடைக்காதவர்கள் செய்கிற அரசியல் தேடலுக்கு, அரசியல் தீனிக்கு இந்த மாணவியின் பிரச்னையை நாங்கள் இரையாக்க விரும்பவில்லை. படிப்பினையாக கொண்டு, அதற்குரிய இடங்களை எல்லாம் சென்று ஆய்வு செய்தோம்.

கைது செய்யப்பட்டுள்ள நபரின் மனைவி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார். அந்த வகையில் அவர் அடிக்கடி வந்து சென்றதால் நுழைவு வாயிலில் இருந்தவர்களுக்கு சந்தேகம் கொள்ள முடியாத சூழல் எழுந்திருக்கிறது. பிரியாணி கடை வைத்துள்ளார், மாணவர்களுக்கு அவர் அறிமுகம் என்பதெல்லாம் சொல்லுகிற செய்திதான். அனைத்தும் விசாரணை முடிவில் தான் தெரிய வரும். ஆனால் நடந்த தவறு, தவறுதான்.

பல்கலைக்கழக அடையாள அட்டையை காண்பித்துவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அறிவுத்தி இருக்கிறோம். பல்கலைக்கழக வளாகத்தில் சம்பவம் நடந்த பகுதி புதர்கள் நிறைந்த சி.சி.டி.வி.,க்கு உட்படாத பகுதி. இனி அதுபோன்ற பகுதிகளில் புதர்களை அகற்றிவிட்டு, அங்கு மின்விளக்குகள் பொருத்த கூறி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us