sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளில் சத்துணவு காலி இடங்கள்; கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி

/

பள்ளிகளில் சத்துணவு காலி இடங்கள்; கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி

பள்ளிகளில் சத்துணவு காலி இடங்கள்; கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி

பள்ளிகளில் சத்துணவு காலி இடங்கள்; கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி


UPDATED : ஜன 21, 2025 12:00 AM

ADDED : ஜன 21, 2025 10:01 AM

Google News

UPDATED : ஜன 21, 2025 12:00 AM ADDED : ஜன 21, 2025 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:
திருவாடானை யூனியனில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் பணிச்சுமையால் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

வறுமையில் வாடும் கிராம ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டம் செயல்படுத்தபடுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூன்று பேர் பணிபுரிய வேண்டும். திருவாடானை யூனியனில் 393 சத்துணவு பணியாளர்களில் 169 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதில் அரசூர், அல்லிக்கோட்டை, அழகமடை, ஆதியூர் (மேற்கு), அரசத்துார், கருமொழி, கிடங்கூர், கீழக்கோட்டை, கோவனி, சம்பாநெட்டி, சித்தாமங்கலம், சின்னத்தொண்டி, செங்காலன்வயல், திருவடிமதியூர், நீர்க்குன்றம், புதுவயல், புல்லுார், பெருமானேந்தல், ஊரணிக்கோட்டை, காட்டியனேந்தல், கடம்பூர், சமத்துவபுரம், எட்டுகுடி, தொண்டி, பதனக்குடி, பாசிபட்டினம் ஆகிய பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூன்று பணியாளர்களும் இல்லை.

இதனால் ஒவ்வொரு பணியாளரும் நான்கு முதல் ஏழு பள்ளிகள் வரை கூடுதல் பொறுப்பேற்று பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் வருகை பதிவை பொறுத்தே செலவினம், பொருட்களின் அளவு இருக்கும் என்பதால் இதற்கான கணக்குகளை பராமரிப்பது சத்துணவு அமைப்பாளரின் பணி.

ஒரு அமைப்பாளர் பல பள்ளிகளுக்கு செல்வதால் சிரமம் அடைந்துள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us