பல்கலை., மாணவி விவகாரம் வெள்ளை அறிக்கை; எம்.எல்.ஏ., கோரிக்கை
பல்கலை., மாணவி விவகாரம் வெள்ளை அறிக்கை; எம்.எல்.ஏ., கோரிக்கை
UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 10:25 AM
புதுச்சேரி :
தொழில்நுட்பங்களை விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என, பல்கலை., நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் கூறுவது ஏற்புடையதல்ல.
மாணவிக்கு உரிய கவுன்சிலிங் அளித்து, வழக்கு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு பெற வேண்டிய பொறுப்பு அரசு மற்றும் காவல்துறைக்கு உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனே கைது செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த போதிய செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும். சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி, மதில்சுவர் முழுமையாக கட்ட வேண்டும். வெளியாட்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதை தடை செய்ய வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ளதுபோல் இங்கும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்புக்கு காவலர்களை நியமிக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கவர்னர், முதல்வர், உள்துறை அமைச்சர், தலைமை செயலர், கலெக்டர், டி.ஜி.பி., ஆகியோர் உரிய விளக்கத்தை பொதுமக்களுக்கு வெள்ளை அறிக்கையாக அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.