அறிவு சார் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
அறிவு சார் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
UPDATED : ஜன 31, 2025 12:00 AM
ADDED : ஜன 31, 2025 09:56 AM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அறிவு சார் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேட்டுப்பாளையம் நகராட்சி, மணி நகர் உயர்நிலைப் பள்ளி எதிரே, நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் இயங்கி வருகிறது.
இந்த நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான, 4000 புத்தகங்கள், இணைய தல வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உள்ளன. 2025ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள், வேலைவாய்ப்பு சம்பந்தமான போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளன. இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, அறிவு சார் மையத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
வருகிற பிப். 1ம் தேதி காலை, 10:00 மணிக்கு வகுப்பு துவங்க உள்ளது. இதில் மத்திய அரசு உயர் பதவியில் இருப்பவர்களும், அனுபவ வாய்ந்த ஆசிரியர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
எனவே ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.