இயற்கை சார்ந்த உணவு பதனிடல் வர்த்தகத்தில் வெற்றி பெறுவது எளிது
இயற்கை சார்ந்த உணவு பதனிடல் வர்த்தகத்தில் வெற்றி பெறுவது எளிது
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:32 AM

கோவை:
வேளாண் பல்கலை, உயிர்த் தொழில்நுட்ப சிறப்பு மையம் சார்பில், அக்ரி டெக் ஸ்டார்ட் அப் தொழில் சந்திப்பு நடந்தது. வேளாண்சார் தொழில்முனைவோரை உருவாக்குவதே இந்நிகழ்வின் நோக்கம்.
நிகழ்வில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்ட உதவியாளர் ராஜசேகர் பேசுகையில், இந்தியாவில் வளர்ந்து வரும் அக்ரி டெக் ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சி, அரசின் உதவித் திட்டங்கள், தொழில் முனைவோருக்கான இன்குபேஷன் மையங்கள் குறித்து விளக்கினார். புஸ்மர் நிறுவன சி.இ.ஓ., கிஷோர் இளநீர் - வாழ்வின் அமுதம் என்ற தலைப்பில் பேசும்போது, இயற்கை சார்ந்த உணவு பதப்படுத்துதல், ரசாயன கலப்பின்றி நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தால், வியாபார உத்திகள் இல்லாவிட்டாலும் வெற்றி பெறலாம் என்றார்.
அம்மாச்சி மசாலா நிறுவனர் ஜமுனா பிரியா, குறைந்த குளூக்கோஸ் அளவுள்ள ஆரோக்கிய உணவு, உணவு பதப்படுத்தும் தொழிலில், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். தாவரவியல் மூலக்கூறு உயிர் தொழில்நுட்ப மைய இயக்குனர் செந்தில், கோக் ஸ்பிட் திட்ட இயக்குனர் மோகன்குமார், தாவர உயிர்த் தொழில்நுட்பவியல் தலைவர் கோகிலாதேவி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.