sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி

/

மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி

மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி

மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி


UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM

ADDED : ஜூன் 27, 2025 08:35 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM ADDED : ஜூன் 27, 2025 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளிக்கூடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தப்படுவது அமைச்சருக்கு கேவலமாகத் தெரியவில்லையா என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:


திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணியக்கூடாது என சொல்கின்ற அமைச்சர் மகேஷ், பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்வாரா? பள்ளிக்குழந்தைகள், கோவில்களில் சாமியிடம் வைத்த, பல நிறங்களில் உள்ள கயிறு கட்டும் வழக்கம் இருப்பது, நாம் அறிந்ததே.

ஆன்மிக அடையாளமான, கயிறு, ருத்ராட்சத்தை அணியக்கூடாது என, இவர்களின் மதச்சார்பற்ற பள்ளிகள்தான் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ருத்ராட்சம் அணிவது, ஜாதி பேதங்களை தகர்க்கும்; ஆன்மிகத்தை வளர்க்கும் என, அண்ணாமலை கூறியது, இவர்களுக்கு ஏன் உறுத்துகிறது.

காரணம், ஹிந்து என்ற ஒரே குடையில், அனைத்து ஜாதியினரும் வந்து விட்டால், இவர்கள் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை போக்க, காமராஜர் சீருடை திட்டம் கொண்டு வந்தார் என சொல்கிறார் மகேஷ்.

ஆனால், கொள்ளையடித்த பணத்தை, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கிறார் என, அதே காமராஜர் மீது அவதுாறு பரப்பியவர்கள் இவர்கள். அமைச்சருக்கு பள்ளிக்குள் ருத்ராட்சம் அணிவது பிற்போக்குத்தனமாக தெரிகிறது. ஆனால், பள்ளிக்கூடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தப்படுவது, கேவலமாகத் தெரியவில்லை.

திருநீறு வைப்பதை அனுமதிக்கலாமா, வேண்டாமா என யோசிப்பதை விட்டுவிட்டு, ஆண்டுதோறும் 50,000 மாணவர்கள் தமிழில் பெயிலாவதை தடுப்பது எப்படி என யோசியுங்கள்.

எட்டாம் வகுப்பு மாணவனுக்கு, ஐந்தாம் வகுப்பு கணக்கு தெரியவில்லை. இதுதான் பள்ளிக்கல்வித்துறை லட்சணம். இதில் பிற்போக்குத்தனம் குறித்து பாடம் எடுப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us