sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பருகலாம் குறள் அமுதம்; படிக்கலாம் வாங்க! அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை

பருகலாம் குறள் அமுதம்; படிக்கலாம் வாங்க! அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை

பருகலாம் குறள் அமுதம்; படிக்கலாம் வாங்க! அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை


UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM

ADDED : ஜூலை 04, 2025 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM ADDED : ஜூலை 04, 2025 10:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்படும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையால், திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களைக் கொண்டு கோவை அரசு கலைக்கல்லுாரி, சரவணம்பட்டி ரூபி மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி தாய்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் திருக்குறள் பயிற்சிவகுப்புகள், வரும் 7ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்படும். நிறைவுநாளன்று பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் தங்களது தன்விவரக்குறிப்புடன் ஆதார் அட்டை இணைத்து tamilvalar.cbe@gmail.com என்ற இணைய முகவரி வழியாக அனுப்ப வேண்டும். இதுகுறித்து விபரங்களுக்கு 89034 12685, 90424 31219 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us