sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் ஹைடெக் ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்

சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் ஹைடெக் ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்

சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் ஹைடெக் ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்


UPDATED : ஜூலை 21, 2025 12:00 AM

ADDED : ஜூலை 21, 2025 08:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2025 12:00 AM ADDED : ஜூலை 21, 2025 08:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
மத்திய அரசின் நிதிஉதவியுடன், தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட, ஹைடெக் ஆய்வகங்கள், பயிற்றுனர் பற்றாக்குறையால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

அதிக பணிச்சுமை


தமிழகத்தில், 6,000க்கும் மேற்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகங்கள் தலா, 6.04 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் 10, மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில், 20 கம்ப்யூட்டர்கள் உள்ளன.

இந்த ஆய்வகங்களை நிறுவுவதில் இருந்து தேவையான கம்ப்யூட்டர்கள், புரொஜக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவது மற்றும் பயிற்றுநர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகள், கெல்ட்ரான் என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.

பல பள்ளிகளில் ஹைடெக் ஆய்வக பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிக பணிச்சுமை, சரியாக ஊதியம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், பயிற்றுநர்கள் பணியில் தொடர ஆர்வம் காட்டவில்லை.

இதனால், ஆய்வகங்களை பயன்படுத்த முடியாமல் தலைமையாசிரியர்கள் உள்ளனர்.

ஆய்வக பயிற்றுநர்கள் கூறியதாவது:


கடந்த, 2024ல் தேர்வு நடைபெற்று கவுன்சிலிங் வாயிலாக பணியில் சேர்ந்தோம். 11 மாதங்களுக்கு ஒப்பந்தப்படி, மாதம், 11,400 ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 9,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

நிறைய சிக்கல்


ஒவ்வொரு மாதமும், 7ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், மாத இறுதியில் சம்பளம் வழங்கப்படுகிறது. சில இடங்களில் இரண்டு மாதம் கூட சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.

உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பயிற்றுநர், இரண்டு ஆரம்பப்பள்ளிகளை சேர்த்து கவனிக்க வேண்டும். ஸ்மார்ட் போர்டு, எமிஸ் உள்ளிட்ட பணிகளையும் கவனிக்க வேண்டும்.

ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு பள்ளியில் இருந்து அழைப்பு வரும். இதனால், நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலை அனைத்து இடங்களிலும் தொடர்கிறது. எங்களுக்கு பயிற்சிகளும் முறையாக வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us