அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்க வாய்ப்பு
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்க வாய்ப்பு
UPDATED : ஆக 23, 2025 12:00 AM
ADDED : ஆக 23, 2025 08:20 AM
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் குழுவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறுதானிய உணவகம் அமைத்து நடத்துவதற்கு, மகளிர்சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு, பஞ்., அளவிலான கூட்டமைப்பு மற்றும் பண்ணை சார்ந்த, சாராத தொகுப்பின் உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர் குழுவினர், உணவகத்திற்கு, 5 முதல், 8 கி.மீ., சுற்றளவில் இருக்க வேண்டும். 'ஏ' அல்லது 'பி' மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். குழுவில் உள்ள, 6 முதல், 8 உறுப்பினர்கள் தாமாக முன்வந்து உணவகத்தை நிர்வகிக்க வேண்டும். அங்காடி, விற்பனை நிலையங்கள் நடத்திய அனுபவம் பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மின்னணு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை அனுபவம் பெற்றிருக்கு வேண்டும். நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். குழுவிடம் உள் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உடைய மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.