அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : ஆக 29, 2025 08:30 AM
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் ஆர்.சி.லயோலா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, நகராட்சி வருவாய் ஆய்வாளர் விஜய பால்ராஜ் ,மேற்பார்வையாளர் ராம்ஜி, சுகாதார ஆய்வாளர் ராஜ் மோகன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முத்துப்பாண்டி, பி.டி.ஓ.க்கள் காமராஜ், பிரபுபாண்டியன், கவுன்சிலர் முகமதுமீரான், ஒன்றிய செயலாளர் பாலு, நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர்.
பழநி : பழநி சிறுமலர் தொடக்கப் பள்ளியில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் டிட்டோ, தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.
ேவடசந்துார் : புர்கானிய அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. பள்ளி நிர்வாகி பஷீர் அகமது தலைமை வகித்தார்.
தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் மேகலா, துணைத்தலைவர் ராகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பிரேமா காந்திமதி வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் நல்லுசாமி, சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், கவுன்சிலர்கள் ரியாஜ் தீன், காட்டுபாவா சேட், வேல்முருகன், அன்சர் மைதீன், தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், மருதபிள்ளை, சுப்பிரமணி, மணிமாறன், சையது இப்ராஹிம், சண்முகவேல், ஜெயபாஸ்கரன் பங்கேற்றனர்.
வடமதுரை: வடமதுரை கலைமகள் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் பேரூராட்சி தலைவர் நிருபாராணி ,கவுன்சிலர் கணேசன் துவக்கி வைத்தனர். வட்டார கல்வி அலுவலர் குகப்பிரியா, பி.டி.ஓ., பஞ்சவர்ணம், பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் பாலரவிச்சந்திரன், ராமு பங்கேற்றனர். ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.