sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்துடன் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை ஒப்பந்தம்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்துடன் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை ஒப்பந்தம்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்துடன் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை ஒப்பந்தம்


UPDATED : நவ 15, 2025 07:46 AM

ADDED : நவ 15, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2025 07:46 AM ADDED : நவ 15, 2025 07:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அடைகாக்கும் மையம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் அடைகாக்கும் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கான ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி ஏ.ஐ.சி., பாஸ்ட் மைய இயக்குநர் கராட்கர் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பதிவாளர் சுந்தரமூர்த்தி கையெழுத்திட்டு பரிமாரிக் கொண்டனர். இதன் மூலம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த இரண்டு மையங்களும் இணைந்து அடைகாப்பு சேவைக்கான வாய்ப்புகளை வழங்கும். அவர்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட உள்ளது.

பதிவாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், 'இக்கூட்டாண்மை, எங்களின் சிறந்த ஆராய்ச்சித் திறனையும், புதிய தொழில்முனைப்பு யோசனைகளையும் சக்திவாய்ந்த முறையில் இணைக்கிறது. இதன் மூலம், 'டீப்டெக்' திறன்களை வலுப்படுத்தவும், இந்தப் பகுதியின் கல்வி மற்றும் ஸ்டார்ட்அப் சூழலில் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் முடியும். இது எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது' என்றார்.

முதன்மைச் செயல் அதிகாரி விஷ்ணு வரதன் கூறுகையில், 'இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரியின் டீப்டெக் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. எங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அணுசக்தித் துறையின் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களான துாய்மையான ஆற்றல், சென்சார்கள் மற்றும் மேம்பட்ட மூலப்பொருட்கள் போன்றவற்றை எளிதாக அணுகிப்பெற முடியும். இது, அவர்களின் புதுமையான கருத்தாக்கங்களையும், யோசனைகளையும் வணிக ரீதியான தயாரிப்புகளாக மிக வேகமாக மாற்ற உதவும்' என்றார்.

டாக்டர் சுப்ரமணியன், முதன்மைச் செயல் அதிகாரி விஷ்ணு வரதன், அறிவியல் அதிகாரி அனிதா டோப்போ கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us