ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : ஜன 22, 2026 12:02 PM
ADDED : ஜன 22, 2026 12:04 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுதல் குறித்து, மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
வேலுார் மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் சம்பத்குமார், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
மாணவ, மாணவியர் மூலம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நாகேந்திரன் மற்றும் சவுமியா உட்பட பலர் பங்கேற்றனர்.
