sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கல்வி அவசியம்: விஜயேந்திரர் அருளாசி

தேசத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கல்வி அவசியம்: விஜயேந்திரர் அருளாசி

தேசத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கல்வி அவசியம்: விஜயேந்திரர் அருளாசி


UPDATED : ஜன 26, 2026 08:50 PM

ADDED : ஜன 26, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 08:50 PM ADDED : ஜன 26, 2026 08:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'கல்வி வியாபார நோக்கத்தில் இல்லாமல், தேசத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும்,' என, காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகளின், 91வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ சங்கர வித்யாலயா பொன் விழாக்குழு சார்பில், 'ஆசிரியர் சம்மேளனம்' என்ற நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.

இதில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கி பேசியதாவது:

நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமைகள் உள்ளன. கல்வியை லட்சியமாகக் கருதி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். நியாயம், தர்மம், செழிப்பு, நேர்மையான நிர்வாகம் இருப்பது, ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை.

அன்றாட தேவை, நீண்ட கால தேவையை உணர்ந்து, கல்வியில் சூழலை உருவாக்க வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், பண்பு, பணிவு, பரிவு இருப்பது அவசியம். சித்தாந்தம், பக்க விளைவுகள் ஏற்படுத்தாத கல்வி தேவை. தண்ணீர், காற்றை மாசுபடுத்தாத சூழலுடன் கல்வி போதிக்க வேண்டும்.

இளம் வயதினருக்கு ஒழுக்கத்தை போதிப்பது பெற்றோர், ஆசிரியர்களின் தலைசிறந்த கடமை. தேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட கல்வி முறை இருக்க வேண்டும். கண்டுபிடிப்புகளை ஆக்கப்பூர்வமாகவும், வேகமான வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் பயன்படுத்த வேண்டும்.

தேச பக்தி அதிகரிக்க, கலாசாரத்துடன் கூடிய கல்வி அவசியம். வளர்ச்சியை பிறருக்கு பகிரும் பக்குவம் தேவை. திறமையான பாரதம், வளமையான பாரதத்தை உருவாக்கும் வகையில் ஆசிரியர்கள் விளங்க வேண்டும்.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, திறமைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், சிறந்த குணம் படைத்த மனிதர்களாக இருப்பது அவசியம். பாரதம் என்ற ஒற்றுமை அனைவரிடமும் இருக்க வேண்டும். கல்வி வியாபார நோக்கத்தில் இல்லாமல், தேசத்தின் வளர்ச்சி தான் அடிப்படை என்ற நோக்கத்தில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசுகையில், 'கிராம பள்ளி மாணவர்களின் மேற்படிப்பு ஆர்வத்தை துாண்டும் நடவடிக்கைகளில் ஐ.ஐ.டி., ஈடுபட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் படிக்கும் வசதிகள் உள்ளன.

'நாட்டின் முன்னேற்றம் கல்வியில் இருந்து துவங்குகிறது. குழந்தைகளுக்கு கல்வியுடன் நல்ல சிந்தனையை புகட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமை,' என்றார்.

இந்நிகழ்ச்சியில், மும்பை தென்னிந்திய கல்வி சங்க முதல்வர் சங்கர், வயலின் மேதை சுப்ரமணியன் மற்றும் ஆயிரம்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us