பிரதமர் மோடியுடன் இருக்கும் ஏ.ஐ., படத்தை பகிர்ந்த பிரான்ஸ் அதிபர்
பிரதமர் மோடியுடன் இருக்கும் ஏ.ஐ., படத்தை பகிர்ந்த பிரான்ஸ் அதிபர்
UPDATED : பிப் 19, 2026 11:41 AM
ADDED : பிப் 19, 2026 11:42 AM
புதுடில்லி:
பிரதமர் மோடி உடன் இருக்கும் ஏ.ஐ., படத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் படத்தில் 'ஆமாம் இது ஏ.ஐ., படம்' எனக்குறிப்பிடப்பட்டு உள்ளதுடன், அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நண்பர்கள் சந்திக்கும் போது புதுமை படைக்கப்படும். ஏ.ஐ., மாநாட்டுக்கு தயார்' எனத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்த பதிவுக்கு ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் லைக் செய்து வருவதால், இந்த படம் வைரலாகி உள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடந்தது. புதுமை, தொழில்நுட்பம் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த 'இந்தியா - பிரான்ஸ் இயர் ஆப் இனோவேஷன் 2026' திட்டத்தை இருவரும் துவக்கி வைத்தனர்.
மேலும், கர்நாடக மாநிலம் வேமகலில் டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைத்த, எச்125 இகு ரக ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவம் துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அவர் டில்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். டில்லியில் நடக்கும் ஏ.ஐ., மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

