sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன்

/

இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன்

இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன்

இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன்


UPDATED : பிப் 19, 2026 11:46 AM

ADDED : பிப் 19, 2026 11:47 AM

Google News

UPDATED : பிப் 19, 2026 11:46 AM ADDED : பிப் 19, 2026 11:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் திமுக அரசின் ஆட்சி கனவும் பறிக்கப்படும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை;

பல ஆண்டுகள் இழுத்தடிப்புக்குப் பின், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உதவி பேராசிரியர் தேர்வின் முடிவை நிதி நெருக்கடி காரணமாக தி.மு.க., அரசு வெளியிடாததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

ஐந்தாண்டுகளாக தேர்வை நடத்தாமல் ஒத்திவைப்பதும், தேர்தல் காலம் வந்ததும் கண் துடைப்புக்காக ஒரு தேர்வை நடத்துவதும், பின் தேர்வு முடிவை வெளியிடாமல் மெத்தனமாக இருந்து, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பையும், கல்லூரி மாணவர்களின் படிப்பையும் பாழாக்குவது தான் தி.மு.க., அரசின் இளைஞர் நலனா?

வெற்று பிரம்மாண்ட விழாக்கள் நடத்துவதிலும், தினமொரு விளம்பரம் வெளியிடுவதிலும் வாரி வாரி பணத்தை இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, 2,708 உதவி பேராசிரியர்களுக்கு பணியாணை வழங்கி, சம்பளம் வழங்க நிதியில்லையா என்ன?

மொத்தத்தில் கனவைச் சொல்லுங்க என்று தெருதோறும் கேட்டுவிட்டு, தமிழக இளைஞர்களின் அரசு வேலை கனவை சிதைக்கும் தி.மு.க., அரசின் 'மீண்டுமொரு முறை ஆட்சியை பிடிக்கும்' கனவும் நிறைவேறாது.

இவ்வாறு அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us