sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மகனை அடித்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஆன்லைனில் புகார் அனுப்பிய தந்தை

/

மகனை அடித்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஆன்லைனில் புகார் அனுப்பிய தந்தை

மகனை அடித்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஆன்லைனில் புகார் அனுப்பிய தந்தை

மகனை அடித்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஆன்லைனில் புகார் அனுப்பிய தந்தை


UPDATED : மார் 17, 2026 03:05 PM

ADDED : மார் 17, 2026 03:06 PM

Google News

UPDATED : மார் 17, 2026 03:05 PM ADDED : மார் 17, 2026 03:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:
அந்தியூர் அருகே மகனை அடித்த அரசுப்பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, ஆன்லைனில் போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் ஜீஸ்னு, 13; தவிட்டுப்பாளையம் பழனியப்பா எட்டாவது வீதியை சேர்ந்த முரளிதரன் மகன் சேஷாத்திரி, 13; இவர்கள் இருவரும் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். பள்ளி வராண்டாவில் சேஷாத்ரி நேற்று மாலை, 04:00 மணிக்கு விளையாடி கொண்டிருந்தான். அப்போது மேல்நிலைக்கு பாடம் நடத்தும் கணித ஆசிரியர் சுகுமாரன், மாணவனை அடித்ததாக தெரிகிறது.

இதனால் அழுத மாணவனை பார்த்து, 'என்ன நடிக்கிறாயா?' என ஆசிரியர் கேட்ட போது, அருகிலிருந்த ஜீஸ்னு, 'நீங்கள் அடித்ததால் தான் அழுகிறான்' என கூறியுள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த ஆசிரியர், 'நீ வக்காலத்து வாங்குகிறாயா?' எனக் கூறி ஜீஸ்னுவையும் அடித்துள்ளார்.

இது குறித்து பெற்றோர்களிடம் மாணவர்கள் கூற, ஜீஸ்னு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். ஆசிரியர் சுகுமாரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவனின் தந்தை தியாகராஜன், ஆன்லைனில் போலீசுக்கு புகார் அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us