நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வானுார் அரசு கல்லுாரியில் கோலப்போட்டி
நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வானுார் அரசு கல்லுாரியில் கோலப்போட்டி
UPDATED : மார் 28, 2026 05:04 PM
ADDED : மார் 28, 2026 05:06 PM
வானுார்:
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டிக்கு கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி துவக்கி வைத்து, நுாறு சதவீத ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்து பேசினார். போட்டியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகள் ஆனந்தி, ஜெகதீஸ்வரி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
தமிழ்த்துறை மாணவிகள் சுபாஷினி, சுவேதா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், முதலாம் ஆண்டு தாவரவியல் துறை மாணவிகள் ஐஸ்வர்யா, தாசிலிமா பர்வின் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் வானுார் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜூ, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வித்யாதரன் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனர் துர்கா, வருவாய் ஆய்வாளர் ரேவதி, நகராட்சி பொறியாளர் ரவிக்குமார், பணி மேற்பார்வையாளர் ஆரோக்கியா, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அழகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆங்கில துறை பேராசிரியர் காந்திமதி நன்றி கூறினார்.

