sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தனலட்சுமி சீனிவாசன் - தைவான் பல்கலைகள் இடையே ஒப்பந்தம்

/

தனலட்சுமி சீனிவாசன் - தைவான் பல்கலைகள் இடையே ஒப்பந்தம்

தனலட்சுமி சீனிவாசன் - தைவான் பல்கலைகள் இடையே ஒப்பந்தம்

தனலட்சுமி சீனிவாசன் - தைவான் பல்கலைகள் இடையே ஒப்பந்தம்


UPDATED : மார் 29, 2026 10:12 PM

ADDED : மார் 29, 2026 10:13 PM

Google News

UPDATED : மார் 29, 2026 10:12 PM ADDED : மார் 29, 2026 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சர்வதேச ஆராய்ச்சிக்காக, தனலட்சுமி சீனிவாசன் பல்கலை - தைவானின் மிங் சி தொழில்நுட்ப பல்கலை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை - தைவானின் புகழ்பெற்ற மிங் சி தொழில்நுட்ப பல்கலை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, உற்பத்தி செயல்முறை, தொழில்நுட்பத்தின் சமீபத்திய போக்குகள் குறித்த, சர்வதேச கருத்தரங்கம், பல்கலை வளாகத்தில், கடந்த 25ம் தேதி நடந்தது.

சர்வதேச கல்வி மற்றும் தொழில்நுட்ப துறை ஒத்துழைப்பை மேம்படுத்திடும் நோக்கில், இரு கல்வி நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு கையெழுத்தானது.

தைவானின், பல்கலை துணை இயக்குநர் மற்றும் பேராசிரியர் பின் யி சென் மற்றும் உதவிப் பேராசிரியர் மணி கோவிந்தசாமி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, 'நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதில் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றங்கள்' குறித்து, விரிவான கருத்துகளை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களின் சர்வதேச ஆராய்ச்சி பயணத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பல்கலை துணை வேந்தர் டாக்டர் சி.கே.ரஞ்சன், பதிவாளர் டாக்டர் தனசேகரன் தேவராஜ், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப துறை முதல்வர் டாக்டர் வி.சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.







      Dinamalar
      Follow us