sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கடந்த காலத்தை வைத்து சரியான படிப்பை தேர்ந்தெடுக்கலாம்: கல்வியாளர் சவுந்தரராஜன்

/

கடந்த காலத்தை வைத்து சரியான படிப்பை தேர்ந்தெடுக்கலாம்: கல்வியாளர் சவுந்தரராஜன்

கடந்த காலத்தை வைத்து சரியான படிப்பை தேர்ந்தெடுக்கலாம்: கல்வியாளர் சவுந்தரராஜன்

கடந்த காலத்தை வைத்து சரியான படிப்பை தேர்ந்தெடுக்கலாம்: கல்வியாளர் சவுந்தரராஜன்


UPDATED : மார் 29, 2026 10:26 PM

ADDED : மார் 29, 2026 10:28 PM

Google News

UPDATED : மார் 29, 2026 10:26 PM ADDED : மார் 29, 2026 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.

அதில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் பேசியதாவது:
வாழ்வில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என, மூன்று பகுதிகள் உள்ளன. அந்த வகையில் எதிர்காலத்தை நிர்ணயிக்க, நிகழ்காலத்தில் சரியான படிப்பை தேர்ந்தெடுப்பது அவசியம்.

நிகழ்காலத்தில் சரியான படிப்பை தேர்ந்தெடுக்க, கடந்த காலத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

பள்ளி படிக்கும் போது, எதில் நாம் சிறந்து விளங்கினோம் என்பதை பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில், கல்லுாரி படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்படி தேர்ந்தெடுக்கும் படிப்பை, கண்டிப்பாக நாம் நன்றாக விரும்பி படிப்போம். நாட்டில் தற்போது வரை, ரோபாட்டிக் துறை, '4.0' நிலை வரை வளர்ந்துள்ளது.

அடுத்து, '5.0' ரோபாட்டிக் கொண்டு வர, உலகளவில் முயற்சி நடக்கிறது. அந்த வகையில், 'ரோபாட்டிக் மற்றும் ஆட்டோமேஷன்' மிக முக்கிய படிப்பாக உள்ளது.

ஐ.டி., உள்ளிட்ட வேலைக்கு செல்லும் போது, அனைத்து இன்ஜினியர் பட்டதாரிகளையும் ஒரே பார்வையில் தான் பார்ப்பர். வெறும் டிகிரி மட்டும் வைத்திருப்போருக்கு எதிர்காலம் இல்லை; பட்டப்படிப்புடன் திறன் வைத்திருப்போருக்கு மட்டுமே நல்ல எதிர்காலம் உண்டு.

தேசிய கல்விக் கொள்கையின்படி, நிறைய முன்னேற்றமான மாற்றங்கள் நடக்கின்றன. சாதாரண கல்வி கற்கும் முறையில் இருந்து, திறன் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கல்வி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us