sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு மொபைல் போன் கட்டுப்பாடு; கர்நாடகாவில் வரைவு கொள்கை வெளியீடு

மாணவர்களுக்கு மொபைல் போன் கட்டுப்பாடு; கர்நாடகாவில் வரைவு கொள்கை வெளியீடு

மாணவர்களுக்கு மொபைல் போன் கட்டுப்பாடு; கர்நாடகாவில் வரைவு கொள்கை வெளியீடு


UPDATED : ஏப் 03, 2026 06:56 PM

ADDED : ஏப் 03, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2026 06:56 PM ADDED : ஏப் 03, 2026 07:17 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி மாணவர்களிடம் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான வரைவு கொள்கையை, மாநில சுகாதாரத்துறை மற்றும், 'நிமான்ஸ்' மனநல மருத்துவமனை இணைந்து தயாரித்து வந்தது .

இந்த வரைவு கொள்கையை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டு பேசியதாவது:

மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதால் மனநலன், உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகிறது.

மாணவர்களுக்கு தேவையில்லாத பதற்றம், துாக்கமின்மை ஏற்படுகின்றன. இதனால், அவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் வரைவு கொள்கை நிரந்தர தீர்வாக அமையும்.

ஒவ்வொரு பள்ளியும், தனக்கென டிஜிட்டல் பயன்பாட்டு கொள்கையை வகுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மொபைல் போன் உபயோகிக்க மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

இணையத்தை எப்படி சரியான முறையில் உபயோகிப்பது, சைபர் மோசடியில் இருந்து தற்காத்து கொள்வது என்பது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும்.

மொபைல் போன் பயன்பாட்டால், மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்னைகளை ஆசிரியர்கள் உடனடியாக கண்டறிய வேண்டும். அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்க வேண்டும். இந்த கொள்கையின் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் கல்வியறிவு பெறுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us