தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு ஸ்ரீ குரு சர்வா அகாடமி சாதனை

சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு ஸ்ரீ குரு சர்வா அகாடமி சாதனை

சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு ஸ்ரீ குரு சர்வா அகாடமி சாதனை


UPDATED : ஏப் 05, 2026 04:50 PM

ADDED : ஏப் 05, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2026 04:50 PM ADDED : ஏப் 05, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி, கடந்த ஜனவரி 26ல் நடந்த சி.ஏ., தேர்வுகளில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது.

சி.ஏ., பவுண்டேஷன் பிரிவில் பிரணவிகா 337 மதிப்பெண்களும், சஞ்சித் 336 மதிப்பெண்களும் பெற்று தேசிய அளவில் அசத்தியுள்ளனர். இவர்களுடன் சஷ்டிகா ஸ்ரீ 300, சுமன் 294, தீப்சிகா 280 மற்றும் மவுனிகா 280 மதிப்பெண்களுடன் என மொத்தம் ஆறு மாணவர்கள் டிஸ்டிங்ஷன் முறையில் தேர்ச்சி பெற்று நிறுவனத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சி.ஏ., இன்டர் தேர்வில் மகாலட்சுமி தனது முதல் முயற்சியிலேயே இரண்டு குரூப்களிலும் 417 மதிப்பெண்கள் பெற்று, டிஸ்டிங்ஷன் தகுதியுடன் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் பாடப்பிரிவில் மதுமிதா மற்றும் ஜெயக்குமார் தலா 97 மதிப்பெண்களும், விஷ்ணு பாண்டி 96 மதிப்பெண்களும் பெற்று அசத்தியுள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் சிறப்பிடம் பெற்று வரும் இக்கல்வி நிறுவனம், ஏற்கனவே சி.ஏ., இன்டர் தேர்வில் தேசிய அளவில் 23வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்களின் நேரடி வகுப்புகள், தொடர்ச்சியான மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒவ்வொரு மாணவர் மீதான தனிப்பட்ட கவனம் ஆகியவை இந்த வெற்றிக்குக் காரணமாகும்.

தற்போது பவுண்டேஷன் மற்றும் இன்டர் பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வரும் சூழலில், சி.ஏ., பவுண்டேஷன் முழுநேரப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு 96009 22888 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us