sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கை துவக்கம்

/

காஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கை துவக்கம்

காஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கை துவக்கம்

காஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஏப் 06, 2026 09:52 AM

ADDED : ஏப் 06, 2026 09:55 AM

Google News

UPDATED : ஏப் 06, 2026 09:52 AM ADDED : ஏப் 06, 2026 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவ, மாணவியர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபும் புத்தேரி, கைலாசநாதர் கோவில் தெருவில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், ஐ.டி.ஐ., எனப்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு, இன்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனபேக்சரிங் டெக்னீஷியன், அட்வான்ஸ்டு சி.என்.சி., மெஷினிங் டெக்னீஷியன், கம்ப்யூட்டர் எய்டட் மேனுபேக்சரிங் ப்ரோகிராமர், டெக்னீஷியன் மெக்டாரினிக்ஸ், அழகு சாதனவியல், ஒயர்மேன் ஆகிய தொழிற்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

இங்கு 2026 - 27ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, ஆண், பெண் இருபாலருக்கும், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறியவர்களும், கல்லுாரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி கட்டணம் இலவசம், 100 சதவீதம் வேலை வாய்ப்பு, மாதம் 750 ரூபாய் உதவித்தொகை, அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு தமிழ் புதல்வன், புதுமைபெண் திட்டத்தின் மூலம் 1,000 ரூபாய் பெற்று தரப்படும்.

இலவச அடையாள அட்டை, பஸ் பாஸ், வரைபட கருவி, பாடப்புத்தகங்கள் சீருடை 2 செட், ஷூ, தையல் கூலி, விலையில்லா சைக்கிள், லேப்டாப் உள்ளிட்டவை வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு 044 2722 5350; 96594 52204 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாண்டியன், பயிற்சி அலுவலர் எஸ்.செழியன் ஆகியோர் தெரிவித்தனர்.







      Dinamalar
      Follow us