sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உலக போர் வரலாற்றில் முதல்முறையாக ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்

/

உலக போர் வரலாற்றில் முதல்முறையாக ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்

உலக போர் வரலாற்றில் முதல்முறையாக ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்

உலக போர் வரலாற்றில் முதல்முறையாக ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்


UPDATED : ஏப் 15, 2026 10:50 AM

ADDED : ஏப் 15, 2026 10:52 AM

Google News

UPDATED : ஏப் 15, 2026 10:50 AM ADDED : ஏப் 15, 2026 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்:
ரஷ்ய ராணுவ வீரர்கள் குழு ஒன்றை, உக்ரைனின் தரைவழி ரோபோக்கள் சரணடைய வைத்துள்ள நிகழ்வால், உக்ரைனின் போர்கள தொழில்நுட்பங்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா போரை தொடங்கியது. சமீபத்தில் நடந்த ஒரு மோதலில், உக்ரைன் ராணுவம் போர்க்களத்தில் பயன்படுத்திய அதிநவீன மற்றும் ஆயுதம் ஏந்திய ரோபோக்கள் ரஷ்ய ராணுவ நிலைகளை சூழ்ந்து கொண்டன.

ஆளில்லா விமானங்கள்

இந்த ரோபோக்களின் துல்லிய தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, யு.ஜி.வி., எனும் தரைவழி ரோபோக்களிடம் சரணடைந்ததாக தகல்கள் தெரிவிக்கின்றன.

போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக, உக்ரைன் படைகள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா தரைவழி ரோபோக்களை மட்டுமே பயன்படுத்தி, ஒரு ரஷ்ய ராணுவ நிலையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், வீரர்கள் சரணடைவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தரைவழி ரோபோக்களிடம் வீரர்கள் சரணடைவது இதுவே முதல்முறையாகும்.

இது குறித்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சமூக வலைதள பதிவில் கூறிஉள்ளதாவது:


இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; இது, தீமையை கண்டறிவது மற்றும் அதை எதிர்கொள்வது பற்றியது. எங்கள் வீரர்களின் உயிரை பாதுகாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

'ஸ்மார்ட்' போர்முறை

இயந்திரங்கள் போரிடுவதால், மனித உயிர்கள் காக்கப்படுகின்றன. நவீன போர்முறையில் உக்ரைன் முன்னணியில் உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, 'ஸ்மார்ட்' போர்முறையை தொடர்ந்து கடைப்பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இச்சம்பவம் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்கால போர்களில் ரோபோக்களின் பங்கு மற்றும் அது சார்ந்த நெறிகள் குறித்து வல்லுநர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us