நாமக்கல் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் தேர்வில் சாதனை
நாமக்கல் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் தேர்வில் சாதனை
UPDATED : ஏப் 21, 2026 06:54 PM
ADDED : ஏப் 21, 2026 06:59 PM

நாமக்கல்:
நாமக்கல், காவேட்டிபட்டியில் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி, சிறந்த இயக்குனர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, 2025 - 26ம் கல்வியாண்டின், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில், இப்பள்ளி மாணவி பவீனா, 500க்கு, 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அக்ஷதா, 490 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், நேவிகா, 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல், இரண்டு மாணவர்களும், 480க்கு மேல், ஏழு மாணவர்களும், 470க்கு மேல், 16 மாணவர்களும், 450க்கு மேல், 25 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழில், 10 மாணவர்களும், செயற்கை நுண்ணறிவு பாடத்தில், ஏழு மாணவர்களும், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
இம்மாணவ, மாணவியரை, தாளாளர் தங்கவேல், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர். தற்பபோது, கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, அட்மிஷன் நடக்கிறது. ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. விபரங்களுக்கு, 9025895176, 9360967220 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

