sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு முன்பே விடுமுறை விட கோரிக்கை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு முன்பே விடுமுறை விட கோரிக்கை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு முன்பே விடுமுறை விட கோரிக்கை


UPDATED : ஏப் 22, 2026 11:54 AM

ADDED : ஏப் 22, 2026 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2026 11:54 AM ADDED : ஏப் 22, 2026 11:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்:
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விட வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வெயிலின் தாக்கம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு உடனடியாக கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டு தொடங்கி ஓரிரு வாரங்களே ஆவதாலும் மாணவர்களுக்கு தேர்வு போன்ற எத்தகைய அவசர நியதிகளும் இல்லாமையாலும் இந்த விடுமுறை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் பள்ளி வேலை நாட்களில் ஏற்படும் இழப்பீட்டை கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததும் எளிதாக சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us