sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு


UPDATED : ஏப் 27, 2026 10:44 AM

ADDED : ஏப் 27, 2026 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2026 10:44 AM ADDED : ஏப் 27, 2026 10:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
பொதுத்துறை வங்கிகள், ஊழியர்களுக்கான 13வது இருதரப்பு ஊதிய உயர்வு பேச்சுகளை விரைவில் துவங்கி, அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அடுத்த ஊதிய உயர்வு 2027 நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி, இருதரப்பும் ஏற்கும் வகையிலான சுமுகமான ஊதிய ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் ஒப்பந்தங்களை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை தவிர்க்கவும், தொழில்துறையில் சுமுக நிலையை பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வரவிருக்கும் ஊதிய உயர்வுக்கான பேச்சுகளை துவங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச்சேவைகள் துறை கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பிய சுற்றறிக்கையில் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us