சி.எஸ்.கே., சார்பில் கோடைக்கால முகாம்: மே முதல் முதல் துவக்கம்
சி.எஸ்.கே., சார்பில் கோடைக்கால முகாம்: மே முதல் முதல் துவக்கம்
UPDATED : ஏப் 30, 2026 05:34 PM
ADDED : ஏப் 30, 2026 05:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சி.எஸ்.கே., சார்பில், கோடைக்கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம், மே 1ல் துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
சி.எஸ்.கே., எனும் சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில், கோடைக்கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம், சென்னையின் ஆறு இடங்களில், மே 1ல் துவங்குகிறது.
அதன்படி, துரைப்பாக்கம், வேளச்சேரி, போரூர், வானகரம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய ஆறு இடங்களில், தனித்தனியாக முகாம்கள் நடக்க உள்ளன. இந்த முகாமில், 6 முதல் 23 வயதுக்கு உட்பட இருபாலரும் பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு, www.superkingsacademy.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே போல், கோவை, சேலம், திருச்சி, நெல்லை, வேலுார் உள்ளிட்ட இடங்களிலும் முகாம்கள் நடக்கின்றன என, அகாடமி தெரிவித்துள்ளது.

