sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தேர்வு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தேர்வு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தேர்வு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு


UPDATED : மே 08, 2026 08:44 AM

ADDED : மே 08, 2026 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:44 AM ADDED : மே 08, 2026 08:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'பள்ளி நிர்வாகக்குழுவின் தலைவர் மற்றும் துணை தலைவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு உட்பட்டு, பள்ளி நிர்வாகக்குழுவை தேர்வு செய்வது குறித்து, மத்திய கல்வி அமைச்சகம், வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:


ஒரு பள்ளியின் முதல்வராகவோ, தலைவராகவோ இருப்பவர், கல்விக்குழு மற்றும் பள்ளிக் கட்டடக்குழு ஆகிய, இரண்டு துணை குழுக்களுக்கு, உறுப்பினர் செயலராக இருக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு மேலாண்மைக்குழு செயல்பட வேண்டும்.

அதில், உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், கட்டாயம் இருக்க வேண்டும்.

நுாறு மாணவர்களுக்கு 12 பேர் என்ற அடிப்படையில், குழுவில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதிலும், உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்காவது, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இருக்க வேண்டியது கட்டாயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us