sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.குமாரசாமி கல்லுாரியின் புற்றுநோய் கட்டுரை சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியீடு

எம்.குமாரசாமி கல்லுாரியின் புற்றுநோய் கட்டுரை சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியீடு

எம்.குமாரசாமி கல்லுாரியின் புற்றுநோய் கட்டுரை சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியீடு


UPDATED : மே 10, 2026 07:34 PM

ADDED : மே 10, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:34 PM ADDED : மே 10, 2026 07:35 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், மீண்டும் ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான, ரிபோ நியூக்ளிக் அமில மரபணு அடையாளங்களை கண்டறிதல் மற்றும் நியூரல் நெட்வொர்க் பயன்பாடு என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி உதவியுடன், கல்லுாரியின் தகவல் தொழில்நுட்ப துறை இணை பேராசிரியர் கீதா தலைமையில், திட்ட உதவி ஆய்வாளர் ரேணுகா இணைந்து ஆய்வை மேற்கொண்டனர். இதன் மூலம், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மீண்டும் நோய் ஏற்பட்ட பெண்களின், மருத்துவ தகவல் சேகரிக்கப்பட்டு, உலகளாவிய மரபணு தரவுகளுடன் இணைத்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், நோய் மீள்ச்சியை ஏற்படுத்தும் முக்கிய மரபணு அடையாளங்கள் கண்டறியப்பட்டன. நியூரல் நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம், நோயின் எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்கும் முறையில் செயலி உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு ஆரம்ப நோய் கண்டறிதல், சரியான சிகிச்சை முறை மற்றும் நல்ல வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கான மொபைல் செயலி மூலம், சுகாதார கண்காணிப்பு, விழிப்புணர்வு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மருத்துவம், மரபணு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புற்றுநோய் மேலாண்மையில் முக்கிய முன்னேற்றமாக அமைத்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை, இரு சர்வதேச அளவிலான அறிவியல் இதழ்களில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு, கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்தி ஸ்ரீ, செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us