தேசிய வுஷு தற்காப்பு கலை போட்டி: எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்
தேசிய வுஷு தற்காப்பு கலை போட்டி: எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்
UPDATED : மே 11, 2026 11:40 AM
ADDED : மே 11, 2026 11:41 AM
சென்னை:
தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த 'வுஷு' என்ற தற்காப்பு கலை போட்டியில் எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தினர்.
காஷ்மீர் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 'வுஷு' எனும் சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலை போட்டி, பல்கலையில் கடந்த 4ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பல்கலை மாணவ மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 'பிளக்சிபிள் வெப்பன்' பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., முதலாம் ஆண்டு பி.காம்., மாணவர் எம்.அருள் பிரஜித் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி பெருமை சேர்த்தார்.
அதே போல், 'னான்குவான்' மற்றும் 'சிங்கிள் வெப்பன் டாடாவோ' பிரிவுகளில் அதே பல்கலையின் முதலாம் ஆண்டு எம்.காம்., மாணவர் வி.தருண்ராஜ் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
