அரசு கல்லுாரி சேர்க்கை விண்ணப்பம் உதவி மையத்தின் மூலம் வழங்கல்
அரசு கல்லுாரி சேர்க்கை விண்ணப்பம் உதவி மையத்தின் மூலம் வழங்கல்
UPDATED : மே 20, 2026 06:31 PM
ADDED : மே 20, 2026 06:32 PM
வானுார்:
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் செயல்படும் உதவி மையம் மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.
மயிலம் ரோட்டில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் செயல்படும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் இளங்கலை பாடப் பிரிவுகளுக்கும், தமிழக அரசு பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்கான இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், 2026 - 27ம் கல்வி ஆண்டுக்கான அரசு கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவில் வரும் 29ம் தேதி வரையும், தமிழக அரசு பொறியியல் கல்லுாரியில் பாடப்பிரிவில் சேர்வதற்கான இந்த கல்லுாரியில் செயல்படும் வழிகாட்டு மையத்தில் வரும் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைப்படி, இணையதள வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், இந்த கல்லுாரியில் செயல்படும் உதவி மையத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டனர்.
அதற்கான விண்ணப்பப் படிவங்களை கல்லுாரி முதல்வர் வில்லியம் மாணவர்களுக்கு வழங்கினார்.
